விஜய்யின் நட்பு இப்போதும் வலுவாக இருக்கிறது : சூர்யா நெகிழ்ச்சி!

Bookmark and Share

விஜய்யின் நட்பு இப்போதும் வலுவாக இருக்கிறது : சூர்யா நெகிழ்ச்சி!

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ’24’. விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது.

ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இப்படத்தை மே 6 -ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘எனக்கும், விஜய்க்கும் இடையிலான நட்பு இன்னும் வலுவாகவே இருக்கிறது. என்னுடைய மனைவி ஜோதிகா, விஜய் மனைவி சங்கீதா, அஜீத் மனைவி ஷாலினி மூவருக்கும் நல்ல தோழிகளாகத் திகழ்கின்றனர்.

விஜய்யின் 40 வது பிறந்தநாளில் நான் சென்று அவரை வாழ்த்தினேன். அதேபோல என்னுடைய 40 வது பிறந்தநாளுக்கு விஜய் நேரடியாக வந்து வாழ்த்தினார். விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் என்னைக் கவரும்போது அவருக்கு மறக்காமல் வாழ்த்துக்கூறி மெசேஜ் அனுப்பி விடுவேன்’ என்று தங்களது நட்பு குறித்து சூர்யா கூறியிருக்கிறார்.

 


Post your comment





Related News
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?
விஜய், சூர்யாவுக்கு வழி விட்ட தல அஜித் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட்.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.!
அஜித், விஜய் ரசிகர்களை அதிர்ச்சியாக்க்கிய சூர்யா - என்னனு நீங்களே பாருங்க.!
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
ஒரே நாளில் மோத தயாராகும் அஜித், விஜய், சூர்யா - குஷியில் ரசிகர்கள்.!
2018-ல் ஒரே நாளில் மோதுகிறார்களா அஜித், விஜய், சூர்யா - செம தகவல்.!
ஒரே நாளை குறிவைத்த தலதளபதி, சூர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions