ஆக்ஷன் விருந்தாக வரும் விஜய்யின் 'புலி'

Bookmark and Share

ஆக்ஷன் விருந்தாக வரும் விஜய்யின் 'புலி'

துப்பாக்கி, ஜில்லா, கத்தி என்று ஆக்சன் கதைகளாக நடித்த விஜய், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துள்ள புலி படத்தில் அந்த படங்களை விடவும் அதிகப்படியான ஆக்சன் காட்சிகளில் நடித்திருக்கிறாராம்.

ராஜவம்சத்து கதை, அரண்மனை செட்டப்பில் படப்பிடிப்புகள் பெரும்பாலும் நடைபெற்றபோதும், இன்னொரு பக்கம் ஆக்சன் காட்சிகளையும் பெரிய அளவில் செட் போட்டு படமாக்கியுள்ளனர்.

அந்த வகையில், இந்த புலி படத்தில் 6 அதிரடியான சண்டை காட்சிகள் உள்ளதாம். ஆனால் அவற்றை சாதாரணமாக இல்லாமல் ஹாலிவுட் தொழில் நுட்பத்தில் 20 மேற்பட்ட கேமராக்களை பொருத்தி படமாக்கியுள்ளனர்.

அதோடு, ஒவ்வொரு சண்டை காட்சிகளுமே பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம். ஆக, இதற்கு முந்தைய படங்களில் தனக்கான சண்டை காட்சிகளை 50 முதல் 60 நாட்ளில் நடித்து முடித்து வந்த விஜய், இந்த படத்தில் 85 நாட்கள் வரை நடித்திருக்கிறாராம்.

அதனால் இந்த புலி தனது ரசிகர்களுக்கு பெரிய ஆக்சன் விருந்தாக இருக்கும் என்று நினைக்கிறாராம் விஜய்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions