1980-90-களின் நட்சத்திரங்கள் நல்லதுகளை செய்வார்களா.?!

Bookmark and Share

1980-90-களின் நட்சத்திரங்கள் நல்லதுகளை செய்வார்களா.?!

ஒரே பள்ளியில் ஒரே காலகட்டதில் படித்த மாணவர்கள் 25 வருடத்திற்கு ஒருமுறையோ, 50 வருடத்திற்கு ஒருமுறையோ சந்தித்து தங்கள் மலரும் நினைவுகளை மீட்டெடுத்துக் கொள்வார்கள். அதுஒரு அலாதி இன்பம். அதே பாணியல் ஒரே காலகட்டத்தில் அறிமுகமான நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சிகள் ஹாலிவுட்டில தொடங்கி அப்படியே பாலிவுட்டுக்கும் வந்தது.

கடந்த 4 ஆண்டுகளாக அது கோலிவுட்டிற்கும் வந்து விட்டது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது நடிகை சுஹாசினியும், லிஸியும். ஒவ்வொரு ஆண்டும் யாராவது ஒருவர் வீட்டில் அல்லது ஓட்டலில் எல்லோரும் சந்தித்து பேசி, மகிழ்ந்து, ஆடிப்பாடி, விருந்துண்டு செல்வார்கள். இந்த ஆண்டு ராதிகா சரத்குமாரின் ஏற்பாட்டில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கூடி, மகிழ்ந்து, கலைந்தார்கள்.

இப்போது அதே பாணியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 90களில் அறிமுமான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் வீட்டில் நடத்தினார்கள்.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் மீனாவும், சுந்தர்.சியும். விஜய், சூர்யா, அரவிந்த் சாமி, பார்த்திபன், சுந்தர்.சி, இயக்குனர்கள் ஷங்கர், வெங்கட்பிரபு, நடிகைகள் மீனா, ஜோதிகா, சிம்ரன், சங்கீதா, மகேஸ்வரி, இவர்களோடு சென்ட்ரல் அட்ராக்ஷனாக ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டார். வழக்கம்போல சந்திப்பு, மலரும் நினைவுகள், ஆடல், பாடல், விருந்து எல்லாமே நடந்தது.

ஒவ்வொருவருக்குமே இது தனித்த சந்தோஷத்தை கொடுத்தது. சூர்யாவும், விஜய்யும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு அதிகம் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத ஜோதிகா மகிழ்ச்சியின் எல்லையை தொட்டார். இப்படி  ஒவ்வொருவருக்கும் அந்த நாள் ஒரு ஸ்பெஷலாக இருந்தது. அடுத்து 2கே நட்சத்திரங்கள் ஒன்றுகூட இருக்கிறார்கள்.

அதவாது 2000மாவது ஆண்டில் அறிமுகமான நடிகர்கள் ஒன்றுகூடி விருந்துண்டு, ஆடிப்பாடி, மகிழ இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சிம்பு, தனுஷ் மாதிரியான இளம் நட்சத்திரங்கள் மும்முரமாக செய்து வருகிறார்கள். இதுபோன்ற சந்திப்பு நிகழ்ச்சிகள் அபூர்வமானது. ஒவ்வொரு மணித்துளியும் முக்கியமானதாக இருக்கும் இவர்கள் ஒன்றுகூடி விருந்துண்டு, மகிழ்வது அவர்களை புத்துணர்ச்சியூட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் இது வெறும் கேளிக்கை நிகழ்வாகவே நடந்து முடிந்துவிடக்கூடாது என்கிற கவலைதான் பொதுவான சினிமா பார்வையாளர்களுக்கு இருக்கிறது. இதற்கான முதல் கல்லை. 90களின் மீட்டிங்கில் பார்த்திபன் எறிந்திருக்கிறார்.

"நாம் மாதம் ஒருமுறை கூட சந்திக்கலாம். ஆனால் இந்த சந்திப்புகள் சும்மா ஸ்வீட், காரம், காப்பி என்று முடிந்துவிடாமல் ஏதாவது ஒரு நல்ல காரியம் பண்ணலாம். ஆளுக்கு கொஞ்சம் பணமும், நிறைய மனசும்போட்டு ஏதாவது செய்யலாம்" என்றார். இதையே வழிமொழிந்து பேசினார் மீனா. சினிமாவை நேசிக்கிற ஒவ்வொரு ரசிகனின் விருப்பமும் அதுதான்.

இந்த சந்திப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் சினிமாவுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும். தங்கள் காலத்தில் இருந்த சினிமா இப்போது எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது.

இனி சினிமாவில் நம்முடைய பங்கு என்ன என்கிற ஆரோக்கியமான விவாதங்களை நடத்தலாம். ஒரு நல்ல காரியத்துக்கு நிதி திரட்ட நான் ஒரு படம் இயக்குகிறேன். நீங்கள் நடித்துக் கொடுங்கள் என்று பேசலாம்.

ஒரு அறக்கட்டளை தொடங்கி அதில் பணம்போட்டு மருத்துவ உதவியோ, அல்லது ஒரு மருத்துவமனையோ கட்டலாம். திரைப்பட கல்லூரி அமைக்கலாம். ஆரோக்கியமான விவாதங்கள், சிந்தனைகளால் சினிமாவுக்கு புதிய கதவுகளை திறக்கலாம்.

எல்லோருமே சம்பாதித்து முடித்தவர்கள் இனி சம்பாதித்துதான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாதவர்கள் இதனால் பணத்தை தாண்டிய சினிமா பற்றி யோசிக்கலாம். 80, 90, 2கே இப்படி எந்த சந்திப்பாக இருந்தாலும் ஆக்கபூர்வமான விஷங்களும் அதில் இணைந்திருந்தால் சினிமாவும் ஆரோக்கியமாக இருக்கும்.


Post your comment

Related News
விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை! ரசிகர்கள் செம கொண்டாட்டம்
மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற சூர்யா
மீண்டும் ஒரேநாளில் ரிலீஸாகும் விஜய், சூர்யா படங்கள்?
விஜய், சூர்யா,ஆர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் தனித்தனி குணாதிசயங்களில் தன்னை கவர்ந்தார்கள் : ஹன்சிகா
விஜய், சூர்யாவைத் தொடர்ந்து விஷாலும்!
அஜீத்தின் ஓப்பனிங் பாடலில் இந்தி வார்த்தைகள்!
பிசியாக இருக்கும்போதே சினிமாவை விட்டு விலக சமந்தா விருப்பம்
ஏஆர் முருகதாஸைச் சந்தித்த அஜீத், விஜய், சூர்யா!
விஜய், அஜீத், சூர்யாவுடன் ஜோடி சேர துடிக்கும் ஹன்சிகா!
இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை! மீண்டும் தெளிவுபடுத்தும் த்ரிஷா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions