விஜய், சூர்யாவைத் தொடர்ந்து விஷாலும்!

Bookmark and Share

விஜய், சூர்யாவைத் தொடர்ந்து விஷாலும்!

இன்றைக்கு முன்னணியில் இருக்கும் ஒவ்வொரு ஹீரோக்களுக்குமே மார்க்கெட்டை கெட்டியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் நிறையவே உள்ளது.

முக்கியமாக தங்களது ரசிகர்களை எக்காரணம் கொண்டும் ஏமாற்றி விடக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் எத்தனை நம்பிக்கைக்குரிய டைரக்டர்களாக இருந்தாலும் அவர்களிடம் கதை கேட்காமல் நடிப்பதில்லை என்பதில் அனைவருமே பிடிவாதமாக இருக்கிறார்கள்.

அதனால்தான், கெளதம்மேனன் தன்னிடம் கதையே சொல்லாததால் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்க மறுத்தார் விஜய். அதையடுத்து, அதே கெளதமின் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த சூர்யாவும், அவர் கடைசிவரை கதையே சொல்லாததால், நீங்கள் கதை ரெடி பண்ணிவிட்டு கூப்பிடுங்கள் வருகிறேன் என்று சொல்லி குட்பை சொல்லி கழண்டு கொண்டார்.

ஆக, இப்போது விஜய், சூர்யா இருவருமே எந்த இயக்குனராக இருந்தாலும் சீன் பை சீன் கதை கேட்காமல் ஓகே சொல்வதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். அந்த வரிசையில் இப்போது விஷாலும் இணைந்திருக்கிறார்.

இதற்கு முன்பெல்லாம் அவுட்லைனாக கதை சொன்னால்கூட ஓகே சொல்லிவிடும் அவர். இப்போது ஏற்கனவே தன்னை வைத்து பாண்டியநாடு ஹிட் படத்தை கொடுத்த சுசீந்திரனிடமும் முழுக்கதையும் சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டாராம்.

அதனால் இப்போது அவரிடம் முழுக்கதையையும் படம் பார்ப்பது போன்று சொல்லி முடித்திருக்கிறாராம் சுசீந்திரன்.  


Post your comment





Related News
விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை! ரசிகர்கள் செம கொண்டாட்டம்
மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற சூர்யா
மீண்டும் ஒரேநாளில் ரிலீஸாகும் விஜய், சூர்யா படங்கள்?
விஜய், சூர்யா,ஆர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் தனித்தனி குணாதிசயங்களில் தன்னை கவர்ந்தார்கள் : ஹன்சிகா
1980-90-களின் நட்சத்திரங்கள் நல்லதுகளை செய்வார்களா.?!
அஜீத்தின் ஓப்பனிங் பாடலில் இந்தி வார்த்தைகள்!
பிசியாக இருக்கும்போதே சினிமாவை விட்டு விலக சமந்தா விருப்பம்
ஏஆர் முருகதாஸைச் சந்தித்த அஜீத், விஜய், சூர்யா!
விஜய், அஜீத், சூர்யாவுடன் ஜோடி சேர துடிக்கும் ஹன்சிகா!
இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை! மீண்டும் தெளிவுபடுத்தும் த்ரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions