விஜய் படத்தின் தலைப்பு இதுவா?

Bookmark and Share

விஜய் படத்தின் தலைப்பு இதுவா?

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. விவசாய பின்னணியில் அமைந்த கதை என்றும், அரசியல் தூக்கலாக உள்ள கதை என்றும் தகவல் கசிகிறது. ‘படத்தில் விஜய் ஒரு மல்டி மில்லியனராக வருகிறார்.

விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் நல்லது செய்ய நினைக்கும் பணக்காரரான விஜய்க்கு வரும் தடங்கல்கள் என்னென்ன? அவற்றை எப்படி சமாளித்தார்? என்பதே கதை என்கிறார்கள். முருகதாசும் விஜய்யும் இதற்கு முன்னர் இணைந்த படங்களுக்கு துப்பாக்கி என்றும் கத்தி என்றும் பெயரிட்டார்கள். அந்த வரிசையில் விவசாயம் தொடர்பான கதை என்பதால் இந்த தலைப்பு பரவியிருக்கலாம்.

ஆனால் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி தான் படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் டைட்டில் அறிவிக்கப்படும் என்று பட தரப்பில் கூறுகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பழ.கருப்பையா, ராதாரவி வில்லனாக நடிக்கின்றனர். படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.


Post your comment





Related News
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?
லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி? கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதியன்ஸ்.!
தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா?
விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.!
தன்னுடைய தீவிர ரசிகைக்காக தளபதி விஜய் செய்த உதவி - வெளிவந்த ரகசியம்.!
தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா? - படக்குழுவினர் தகவல்.!
தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.!
மாஸ், கிளாஸ் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
தளபதி-62 படம் எப்போது தொடங்கும்? - கசிந்தது சூப்பர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions