கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?

Bookmark and Share

கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?

சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக இதில் வந்தார். கபடி விளையாட்டை வைத்து வெண்ணிலா கபடி குழு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

அமீர் உள்பட சில இயக்குனர்கள் நடிப்பில் பெண்கள் கபடி பற்றிய படம் ஒன்று தயாராகிறது. அஜித் நடிப்பில் திரைக்கு வந்துள்ள விஸ்வாசம் படத்திலும் ஓட்டப்பந்தய

காட்சிகள் உள்ளன. ஏற்கனவே குத்துச்சண்டையை மையமாக வைத்து மாதவன் நடிப்பில் இறுதி சுற்று, கிரிக்கெட் விளையாட்டை வைத்து ஜீவா, ஓட்டப்பந்தய விளையாட்டை வைத்து எதிர்நீச்சல் ஆகிய படங்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் விஜய் அடுத்து நடிக்க உள்ள புதிய படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. இதில் அவர் பெண்கள் கால்பந்து

பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அட்லி இயக்குகிறார். தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு மூன்றாவது தடவை இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

மேலும், இந்த படத்தின் கதைக்களம் வடசென்னையில் நடப்பது போல் இருக்கும் என தெரிகின்றது.

இதற்காக சென்னையில் வடசென்னை போல் பின்னி மில்லில் செட் அமைத்துள்ளதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது.

இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை வருகிற 20-ந் தேதி சென்னையில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது.


Post your comment





Related News
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions