தளபதி விஜய்க்கு அவர் திரைப்பயணத்தில் மிகவும் பிடித்த படம் இதுதானாம்

Bookmark and Share

தளபதி விஜய்க்கு அவர் திரைப்பயணத்தில் மிகவும் பிடித்த படம் இதுதானாம்

விஜய் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் நாயகன். இவர் தற்போதெல்லாம் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை தன் படங்களில் தொடர்ந்து பேசி வருகின்றார்.

இந்நிலையில் விஜய் என்ன தான் இன்று ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்தாலும், ஆரம்பக்கட்டத்தில் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் என பல காதல் படங்களில் தான் நடித்தார்.

விஜய்க்கு துப்பாக்கி, கத்தி தற்போது மெர்சல் வரை எல்லாமே பேவரட் தானாம், அதிலும் கத்தி விஜய்யின் மிகவும் மனதிற்கு நெருக்கமான படமாம்.

ஆனால், விஜய்க்கு எப்போதும் காதல் படங்கள் மீது ஒரு தீரா காதல் தான், அந்த வகையில் அவர் நடித்த காவலன், சச்சின் படங்கள் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இதில் குறிப்பாக சச்சின் படம் விஜய்க்கு ஆல் டைம் பேவரட் படமாம், ஒரு நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார் என்று கேட்பார்கள்.

அதற்கு விஜய் சற்றும் யோசிக்காமல் ஜெனிலியா என்பார், அதிலிருந்தே தெரிந்துக்கொள்ளுங்கள் விஜய்க்கு சச்சின் படம் எவ்வளவு பிடிக்கும் என்று.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions