விஜய்யின் தெறி டீசரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்

Bookmark and Share

விஜய்யின் தெறி டீசரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெறி’ படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளிடையே வெளிவந்த இந்த டீசரை விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும்விதமாக அமைந்துள்ளது எனலாம். 

50 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசரை முழுக்க முழுக்க விஜய்யை மையப்படுத்தியே உருவாக்கியிருக்கிறார்கள். ரசிகர்கள் விஜய்யை எந்த மாதிரி படத்தில் எதிர்பார்ப்பார்களோ அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் இந்த டீசர் மூலம் பூர்த்தி செய்துள்ளார் இயக்குனர் அட்லி. 

டீசரின் ஒவ்வொரு பிரேமிலும் விஜய்யை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். ஒரு ரசிகர் விஜய்யை வைத்து படம் எடுத்தால் எப்படியெல்லாம் எடுப்பாரோ? அந்தளவுக்கு இந்த படத்தை அட்லி ரொம்பவும் ரசித்து எடுத்திருப்பார் என்பது டீசரை பார்க்கும்போதே தெரிகிறது. 

இந்த டீசர் யூடியூப்பில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இதை கண்டுகளித்துள்ளனர். தற்போதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த டீசரை பார்த்துள்ளனர்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1 லட்சம் ரசிகர்கள் இந்த டீசரை கண்டுகளித்து வருகின்றனர். விரைவில், அனைத்து டீசர் சாதனைகளையும் ‘தெறி’ முறியடிக்கும் என நம்பலாம்.


Post your comment





Related News
பிப்ரவரி 26 முதல் திரையில் தோன்றும் விஜய்யின் ‘தெறி’
விஜய்யின் தெறி திருவிழா தொடங்கியது!
தெறி படத்தின் மூலம் திரையில் அறிமுகமாகும் விஜய்யின் மகள்!
தெறி படப்பிடிப்பில் விஜயை பற்றி புதிய தகவலை கூறிய அட்லீ!
விஜய்யின் தெறி பட டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அட்லீ !
படப்பிடிப்புக்கு முடுக்கு – ஜூன் வரை ஓய்வெடுக்கும் விஜய்!
தெறி படப்பிடிப்பில் விஜய்யை வியக்க வைத்த அட்லீ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions