விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை 6.30க்கு ஒரு சர்ப்ரைஸ்

Bookmark and Share

விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை 6.30க்கு ஒரு சர்ப்ரைஸ்

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், நடித்துள்ள 'தெறி' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணியும் முற்றிலும் முடிந்துவிட்டது.

இந்நிலையில் 'தெறி' படத்தின் தெலுங்கு டப்பிங் படமான 'போலீஸ் ஓஹ்டு' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30க்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அடங்கிய புதிய போஸ்டர் ஒன்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் செய்தியாக உள்ளது.

'தெறி'யின் தமிழ் டிரைலர் தமிழக விஜய் ரசிகர்களால் மாபெரும் வரவேற்பை பெற்றது போலவே இந்த தெலுங்கு டிரைலருக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions