விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அட்லீ !

Bookmark and Share

விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அட்லீ !

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தெறி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இன்னும் இப்படத்தின் படப்பிடிப்பு பத்து நாட்கள் மட்டுமே நடைபெற இருக்கிறது. இந்த பத்து நாட்களில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளும், விஜய்-எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளையும் படமாக்கவுள்ளனர். அனேகமாக படப்பிடிப்பு ஜனவரி 20ம் தேதி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு தான் ‘தெறி’ படத்தின் டீசரை உருவாக்க இருக்கிறார்களாம். பொங்கல் தினத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த செய்தி விஜய் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

இப்படத்திற்குப் பிறகு பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது. விஜய் சினிமா உலகத்திற்கு வந்து 23 வருடங்கள் ஆகிறது. இதற்காக புரோமோ வீடியோ ஒன்று, இன்று வெளியாக இருக்கிறது. 


Post your comment





Related News
பிப்ரவரி 26 முதல் திரையில் தோன்றும் விஜய்யின் ‘தெறி’
விஜய்யின் தெறி டீசரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்
விஜய்யின் தெறி திருவிழா தொடங்கியது!
தெறி படத்தின் மூலம் திரையில் அறிமுகமாகும் விஜய்யின் மகள்!
தெறி படப்பிடிப்பில் விஜயை பற்றி புதிய தகவலை கூறிய அட்லீ!
விஜய்யின் தெறி பட டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
படப்பிடிப்புக்கு முடுக்கு – ஜூன் வரை ஓய்வெடுக்கும் விஜய்!
தெறி படப்பிடிப்பில் விஜய்யை வியக்க வைத்த அட்லீ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions