தெறி பட விவகாரம்: விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்

Bookmark and Share

தெறி பட விவகாரம்: விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘தெறி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். மேலும் மகேந்திரன், பிரபு, மொட்டை ராஜேந்திரன், நைனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. ஆனால், காஞ்சீபுரம் மாவட்டம் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படவில்லை.

இது குறித்து விஜய் மக்கள் இயக்க காஞ்சீபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் இ.சி.ஆர்.சரவணன் விடுத்துள்ள அறிக்கையில், விஜய் நடித்துள்ள தெறி படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடுகிறது. ஆனால் சில பிரச்சினைகளால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 60–க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. 

இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலை நீடித்தால் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் திருட்டு வி.சி.டி.க்கள் வந்து விடும். இதனை தடுக்க ரசிகர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

உடனடியாக இந்த மாவட்டத்தில் தெறி படத்தை திரையிட தயாரிப்பாளர் சங்கமும் திரையரங்க உரிமையாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions