டூப் இல்லாமல் .விஜய் எடுத்த தெறி ரிஸ்க்!

Bookmark and Share

டூப் இல்லாமல் .விஜய் எடுத்த தெறி ரிஸ்க்!

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிவரும் படம் தெறி. போலீஸாக நடிக்கும் விஜய்யின் இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. படத்தின் புகைப்படங்கள் பொங்கல் சிறப்பாக வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தன. எனினும் டீஸருக்காக ரசிகர்கள் பெரிதும் காத்திருப்பில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தின் ஒரு சண்டைக் காட்சியில் 100 அடி உயரத்திலிருந்து விஜய் தண்ணீரில் குதிக்க வேண்டும் அந்தக் காட்சியில் டூப் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் டூப்புக்கு விஜய் நோ சொல்லிவிட்டு தானே ரிஸ்க் எடுத்து குதித்துள்ளார்.

இதே பாணியில் குஷி படத்திற்காக விஜய் தலைகிழாக ஒரு பாடலில் டூப் இல்லாமல் தொங்கினார், பத்ரி படத்தில் காரை கையில் ஏற்றிக்கொண்டார். இப்போது தெறி படத்துக்காக அடுத்த ரிஸ்க்.

அட்லி இதுகுறித்து கூறுகையில், நிறைய போலீஸ் படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன. ஆனால் அவற்றிலிருந்து தெறி கண்டிப்பாக மாறுபடும், விஜய் சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்தது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஜய் கடின உழைப்பை இந்தப் படத்திற்காகக் கொடுத்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions