விஜய்யின் தெறி படத்தை லைகா வாங்கியதா? தாணு விளக்கம்

Bookmark and Share

விஜய்யின் தெறி படத்தை லைகா வாங்கியதா? தாணு விளக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தை தயாரித்த லைகா நிறுவனம், இப்போது எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன், 2.ஓ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ஒரு பங்குதாரர் என்று சொல்லி கத்தி படம் வெளியாகயிருந்த நேரத்தில் பெரும் சர்ச்சைகள் எழுந்து பின்னர் அது அடங்கியது. இந்நிலையில் தற்போது தமிழில் தொடர்ந்து மெகா படங்களாக தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது லைகா.

இந்நிலையில், நானும் ரவுடிதான் படத்தை விநியோகம் செய்த லைகா நிறுவனம், தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படத்தையும் வாங்கி வெளியிடுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் இதுகுறித்து தெறி பட தயாரிப்பாளர் எஸ்.தாணு கூறுகையில், தெறி படத்தை லைகா நிறுவனம் வெளியிடுவதாக வெளியான செய்திகள் உண்மையில்லை. அது சம்பந்தமாக லைகா நிறுவனமோ, படத்தை அவர்களிடம் கொடுக்கும் முயற்சியில் நானோ ஈடுபடவில்லை. அதனால் வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தியே என்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions