தெறி படத்தை புறக்கணிப்போம் – விஜய் ரசிகர்கள் ஆவேசம்

Bookmark and Share

தெறி படத்தை புறக்கணிப்போம் – விஜய் ரசிகர்கள் ஆவேசம்

தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (20-03-2016) அன்று சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றில் நடைபெற்றது. இந்த விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும், அரங்கினுள் நுழைந்த சில ரசிகர்களையும் சில அடியாட்கள் சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்து அடித்து துரத்தும் காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திடுள்ளது.மேலும், அங்கிருந்த ரசிகர்களிடம் இது குறித்து கேட்ட போது, சினிமா என்பது ரசிகர்களுக்கு மட்டுமே உருவாக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட ரசிகர்களுக்கே பட விழாக்களில் கலந்துகொள்ள அனுமதி இல்லை. இந்த விஷயம் நடிகர் விஜய்-க்கு தெரியுமா..? என்பது தெரியாது, நாங்கள் தீவிர விஜய் ரசிகர்கள். இன்று விஜய்-யை நேரில் காண வந்து இவ்வளவு அசிகங்களை சந்தித்துள்ளோம்.

இன்று எங்களை தாக்கியது போல், தெறி திரைப்படம் வெளியாகும் நாள் அன்று செய்வார்களா..? நாங்கள் “தெறி” படத்தை புறக்கணிக்க உள்ளோம் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்கள். இதற்கு விஜய் உரிய பதில் சொல்லியாக வேண்டும் என்று கோபத்துடன் பதில் அளித்துள்ளனர்.

“தெறி” படத்தை புறக்கணிப்போம் என்று விஜய் ரசிகர்கள் கூறியிருப்பது, சினிமா ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தையும், தெறி படக்குழுவினர் மீது வெறுப்பையும் உண்டுபண்ணியுள்ளது நிதர்சனமான உண்மை.

விஜய்-யை நேரில் பார்க்க வந்த ஒரே காரணத்துக்காக, பெரும் குற்றவாளி போல சட்டையை பிடித்து இழுத்து வந்து எங்களை வெளியே தள்ளுவது என்ன நியாயம் என்று பொதுவான சினிமா ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதற்க்கு , நடிகர் விஜய் என்ன பதில் சொல்ல போகிறார் பொறுந்திருந்து பார்ப்போம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions