விஜய்யின் தெறி பட டீசர் எப்போது?

Bookmark and Share

விஜய்யின் தெறி பட டீசர் எப்போது?

விஜய்யின் தெறி டீசரை படக்குழுவினர் பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தெறி. தற்போது படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒன்றை தற்போது இரவு பகலாக அட்லீ படம் பிடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் டீசரை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பர்ஸ்ட் லுக் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை பொங்கல் தினத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த விஜய் படக்குழுவினருடன் இணைந்து திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதனை அறிந்த ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் படத்தில் 3 வேடங்களில் விஜய் நடித்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டீசரை பொங்கல் தினத்தில் வெளியிடும் படக்குழுவினர் பட வெளியீட்டை தள்ளி வைக்கத் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions