அந்தர்பல்டியடித்து அவமானம் அடைந்த விஜய் டிவி

Bookmark and Share

அந்தர்பல்டியடித்து அவமானம் அடைந்த விஜய் டிவி

சூப்பர்சிங்கர் போட்டியில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் போட்டியின் வெற்றியாளர்கள் தேர்வு செய்வது வழக்கம். அதுபோலவே நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் போட்டிக்கும் அறிவிக்கப்பட்டது. உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் போட்டி போட்டு வாக்களித்தனர்.

அதன் அடிப்படையில் ஈழத்து சிறுமி ஜெசிக்கா மக்கள் மத்தியில் இடம் பிடித்து கூடுதலான வாக்கினை பெற்றார். ஆனால், விஜய் டிவியும் நடுவர்களும் விதிமுறையினை மாற்றி வாக்கு முடிவுகளை அறிவிக்காது ஜெசிக்காவுக்கு இரண்டாம் இடம் வழங்கியது. இது குறித்து சர்ச்சை வெடித்தது. அனைவர் மத்தியிலும் அவமானம் அடைந்த விஜய் டிவி தற்பொழுது புதிதாக நாடகம் ஆடி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரபல படுத்தி வருகின்றது.

சென்றமுறை நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் சீனியர் சுற்றில் திவாகர் மக்களின் அதிக வாக்குகள் பெற்றார், சையத் நடுவர்களின் அதிக மதிப்பெண் பெற்றார். இருப்பினும் மக்களின் வாக்குகளே இறுதி முடிவென கூறி திவாகரை வெற்றியாளராக அறிவித்தது.

ஆனால் தற்பொழுது மக்களின் வாக்கு 50% நடுவர்களின் வாக்கு 50% என்ற வகையில் தான் முடிவு அறிவிக்கப்பட்டதாம். மக்களின் வாக்கு படி ஜெசிக்கா தான் அதிக வாக்கு பெற்றவராம் அவர் பெற்ற வாக்கு 2601535 என கூறி தன் பொய் முகத்தை கிழித்தெறிய ஒரு நாடகம் போட்டுநடத்திக்கொண்டு இருக்கின்றது. வாக்குகள் ip-யை வைத்து கணக்கிடப்பட்டதாம். அதில் கள்ள ஓட்டுக்கள் அதிகம் வந்துவிட்டதாம். பணத்திற்காக அனைவரை 500 ஓட்டு போடலாம் 1000 ஓட்டு போடலாம் என தம்பட்டம் அடித்த விஜய் டிவி ஓட்டுகளை காசாக மாற்றியபின் அதெல்லாம் கள்ளஓட்டு என அரசியல்வாதிகளை விட அந்தர்பல்டி அடித்துள்ளது.

இதெல்லாம் மேடையில் அறிவிக்காமல், விஷயம் எல்லோருக்கும் தெரிந்தபின்பு அதை மூடி மறைப்பதற்கு புதிதாக நாடகம் ஆடிவருகின்றது. போட்டி நடத்தும்முன் சொல்லப்பட்ட விதிமுறை ஒன்று. போட்டி நடந்து முடிந்தபின் சொல்லப்படும் விதிமுறை வேறு ஒன்று. இனிமேலாவது தமிழர்கள் ஓட்டுப்போடுகிறேன் எனக்கூறி காசைக்கரியாக்காமல் இருந்தால் சரிதான்


Post your comment

Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions