சினிமா பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்த விஜய் டிவி... 'இது மோசடி இல்லையா?'

Bookmark and Share

சினிமா பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்த விஜய் டிவி... 'இது மோசடி இல்லையா?'

தமிழில் ஒரு பிரமாண்டமான குரல் தேடல் என்ற பெயரில் நடைபெற்று வரும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியில், ஏற்கெனவே சில படங்களில் பின்னணி பாடிய ஒருவருக்கு முதல் பரிசு அளித்துள்ளது பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த 18ஆம் தேதி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-5 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே நடந்தது. இதில் பரீதா, ராஜகணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள்.

இவர்களில் பரீதா, ராஜகணபதி ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனந்த் அரவிந்தாக்ஷன், சியாத், லட்சுமி ஆகிய மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

இந்தப் போட்டியில் பலரது எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி கேரளாவின் அரவிந்தாக்ஷன் முதலிடத்தை வென்றார். இவருக்குத்தான் ரூ 75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாகக் கிடைத்தது. இப்போது இந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் யார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இவர் ஒரு பின்னணிப் பாடகர்.

அவர் ஆரோகணம், நீர்ப்பறவை, 10 எண்றதுக்குள்ள, பாண்டிய நாடு, மதயானைக் கூட்டம், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார்.

புதிய குரல்களை அறிமுகப்படுத்தவே இந்தப் போட்டி என்று சொல்லிக் கொண்டு, ஏற்கெனவே அறிமுகமாகி பல படங்களில் பின்னணியும் பாடிய அரவிந்தாக்ஷனை விஜய் டிவி தேர்வு செய்திருப்பது மோசடிதானே? - என்று பலரும் இணையவெளியில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions