விஜய் மாதிரி ஆட்டம் போடணும்: உதயநிதி ஸ்டாலின்

Bookmark and Share

விஜய் மாதிரி ஆட்டம் போடணும்: உதயநிதி ஸ்டாலின்

விஜய் போன்று டான்ஸ் ஆட விரும்புவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளராக கோலிவுட் வந்து ஹீரோவானவர் உதயநிதி ஸ்டாலின். அவர் தற்போது நயன்தாரா, சந்தானம் ஆகியோருடன் சேர்ந்து நண்பேன்டா படத்தில் நடித்துள்ளார்.

அவர் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்துள்ளது இது இரண்டாவது முறை ஆகும். இந்நிலையில் சினிமா பற்றி உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,நயன்தாராவை எனக்கு பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இருந்தே தெரியும்.

அவர் ஒரு நல்ல நண்பர்.ஓகேஓகே படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவை தான் கேட்டோம். ஆனால் அப்போது அவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்ததால் நடிக்க மறுத்துவிட்டார்.

நயன்தாரா மீண்டும் நடிக்க வந்து ராஜா ராணி படத்தில் ஆர்யா ஜோடியாக நடிக்கிறார் என்பதை கேள்விப்பட்டேன். இதையடுத்து அவரை அணுகி இது கதிர்வேலன் காதல் படத்தில் நடிக்க கேட்டேன்.

அவரும் சம்மதித்து நடித்துக் கொடுத்தார்.படப்பிடிபப்பு தளத்தில் நயன்தாரா அனைவரிடமும் நன்றாக பழகுவார். தமிழில் நன்கு பேசுவார்.தற்போதுள்ள நடிகர்களில் நான் விஜய்யை ரோல் மாடலாக பார்க்கிறேன். அவர் போன்று டான்ஸ் ஆட ஆசைப்படுகிறேன் என்றார் உதயநிதி.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
காவேரி மருத்துவமனையில் 20 நிமிடங்கள் காத்திருந்த அஜித் - ஏன்? என்ன நடந்தது?
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் அஜித்
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions