விஜய்யின் 59-வது படத்தில் தேசிய விருது பாடகி உத்ரா

Bookmark and Share

விஜய்யின் 59-வது படத்தில் தேசிய விருது பாடகி உத்ரா

இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘சைவம்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகு’ என்ற பாடலை பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடியிருந்தார். இந்த பாடலை பாடியதற்காக உத்ரா தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கிறார்.

இந்நிலையில் உத்ரா, நடிகர் விஜய் நடிக்க இருக்கும் 59-வது படத்தில் ஒரு பாடல் பாடுகிறாராம். இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைக்கிறார். அட்லி இயக்க இருக்கிறார்.

இதுகுறித்து உத்ரா கூறும்போது ‘‘நான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை. அவருடைய படத்தில் துள்ளலான பாடலை பாடுகிறேன்’’ என்றார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்திற்கு பிறகு அட்லி இயக்கும் படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions