விஜய் வசந்த் அச்சமின்றி படப்பிடிப்பை தொடங்கினார்

Bookmark and Share

விஜய் வசந்த் அச்சமின்றி படப்பிடிப்பை தொடங்கினார்

தொழிலதிபர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், சென்னை 28 படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். தம்பி வினோத்குமார் தயாரிப்பில், ராஜபாண்டி இயக்கத்தில் நடித்த 'என்னமோ நடக்குது' படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால்.

தற்போது மீண்டும் அதே டீம் அடுத்த படத்தை தொடங்கி இருக்கிறது. இதற்கு 'சிகண்டி' என்று முதலில் பெயர் வைத்தார்கள். தற்போது 'அச்சமின்றி' என்று பெயர் மாற்றி இருக்கிறார்கள்.

மேகா, எனக்குள் ஒருவன், டார்லிங் படத்தில் நடித்த சிருஷ்டி டாங்கே ஹீரோயின். பிரேம்ஜி இசை அமைக்கிறார். கல்வி தொடர்பான படம். உயர்கல்வியில் நடக்கும் கொள்ளைகள், முறைகேடுகள், கல்வி தந்தைகள் உருவாகும் விதம் பற்றி படம் பேசப்போகிறது.

சென்னையில் நேற்று (மார்ச் 9) பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் வசந்த் அண்ட் கோ வசந்தகுமார் கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தார். முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் 20 நாட்கள் நடக்கிறது. பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions