கார் சேசிங் காட்சியில் டூப் போடாமல் நடித்த விஜய் வசந்த்

Bookmark and Share

கார் சேசிங் காட்சியில் டூப் போடாமல் நடித்த விஜய் வசந்த்

‘சென்னை 600 028’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுமானவர் நடிகர் விஜய் வசந்த். இவருடைய நடிப்பு தற்போது ‘ஜிகினா’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்கி வருகிறார். விஜய் வசந்துக்கு ஜோடியாக சானியாதார நடித்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் விஜய் வசந்த், மாலைமலர்.காம் நேயர்களுக்காக பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது,
இப்படத்தில் நான் கால் டாக்சி டிரைவராக நடிக்கிறேன். எ

னது நண்பர்களாக ‘கும்கி’ அஸ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பேஸ்புக்கை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது. இதில் நான் கானா பாடத்தெரிந்தவனாக நடித்திருக்கிறேன். ஆனால், எனது குரலில் எந்த பாடலும் பாடவில்லை.

முன்பு ஒரு படத்தில் நான் சொந்த குரலில் பாடுவதற்கு முயற்சி செய்தேன். ஆனால், அந்த பாடலை அந்த படத்திலிருந்து தூக்கி விட்டார்கள். எனவே, இனிவரும் படங்களில் நான் பாடல் பாட சான்ஸ் கேட்டு சென்றால், என்னையே படத்திலிருந்து தூக்கிவிடுவார்கள் என்ற பயத்தினால்தான் சொந்த குரலில் பாட முயற்சி எதுவும் எடுக்கவில்லை. அதனால், பாத்ரூமிலேயே எனது கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் என்று நகைச்சுவையோடு கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, இப்படத்தில் பெரியதாக ஆக்ஷன் காட்சிகள் இல்லையென்றாலும், கார் சேசிங் காட்சிகள் எல்லாம் இருக்கிறது. இந்த காட்சிகளில் நானே கார் ஓட்டியிருக்கிறேன். இந்த படத்தில் நான் ஓட்டிய கால் டாக்சியின் டிரைவர் அந்த காரை ஓட்டியதைவிட நான்தான் அதிகம் ஓட்டியிருக்கிறேன். 


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions