கொட்டிய மழையிலும் தடையில்லாமல் நடந்த விஜய் பட ஷுட்டிங்

Bookmark and Share

கொட்டிய மழையிலும் தடையில்லாமல் நடந்த விஜய் பட ஷுட்டிங்

தீவிரம் காட்டிய கன மழை சென்னையையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்த மழை சினிமா உலகையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. 

பெரும்பாலான படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, அதற்கான நேரத்தில் டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த 4 நாட்களாக நடந்து வந்தது.

அடை மழையை பொருட்படுத்தாமலும், இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்துள்ளனர். இந்த மழையில் விஜய் எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் சண்டைக் காட்சியை படமாக்கியுள்ளனர்.

இந்த சண்டைக் காட்சியை மாஸ்டர் திலீப் சுப்பராயன் படமாக்கினார். நேற்றோடு இந்த படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு சற்று இடைவெளி விட்டுள்ளனர். 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். பிரபு, பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஜய் மட்டும் ஒஸ்தியா? கடுப்பாகி களத்தில் குதித்த பிரபல முன்னணி நடிகர் - நடந்தது என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions