'செல்பி புள்ளே' பாடகிக்கு கிடைத்த பெருமை

Bookmark and Share

'செல்பி புள்ளே' பாடகிக்கு கிடைத்த பெருமை

விஜய் நடித்த 'கத்தி' திரைப்படத்தில் 'செல்பி புள்ளே' என்ற பாடலை விஜய்யுடன் இணைந்து பாடிய பாடகி சுனிதி செளகான்,

ஹாலிவுட் அனிமேசன் திரைப்படத்தின் இந்தி பதிப்பில் ஒரு பாடலை பாடியுள்ளதோடு, அந்த படத்தின் முக்கிய கேரக்டரான எலிசா என்ற கேரக்டருக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த ஃப்ரோசன் (Frozen) என்ற அனிமேசன் படத்தின் இந்தி பதிப்பு விரைவில் டிஸ்னி சேனலில் வரும் டிசம்பர் 12 அன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்திய ரசிகர்கள் இந்த அனிமேசன் படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

ஃப்ரோசன் திரைப்படம் ஆஸ்கர், கோல்டன் க்ளோப் உட்பட எண்ணற்ற விருதுகளை அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் புகழ் பெற்ற ஒரு படத்தில் கோலிவுட் பாடகி ஒருவர் பணிபுரிந்தது பெருமையான ஒரு விஷயமாக கருதப்படுகிறது.

பாடகி சுனிதி செளகான் கவுதம் மேனன் இயக்கிய 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் இடம்பெற்ற 'முதல்முறை' என்று தொடங்கும் பாடல் உள்பா ஒருசில பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஜய் மட்டும் ஒஸ்தியா? கடுப்பாகி களத்தில் குதித்த பிரபல முன்னணி நடிகர் - நடந்தது என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions