விஜய் 60 படத்துக்காக ஐதராபாத் சென்ற படக்குழு

Bookmark and Share

விஜய் 60 படத்துக்காக ஐதராபாத் சென்ற படக்குழு

விஜய் தனது 59-வது படமாக ‘தெறி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து தனது 60-வது படமாக ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 

இப்படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்களும், கதாநாயகியும் தேர்வாகிவிட்ட நிலையில், படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். 

அதன்படி, இயக்குனர் பரதன், ஒளிப்பதிவாளர் சுகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் லொகேஷன் தேர்வுக்காக ஐதராபாத் சென்றுள்ளார்களாம்.

அங்கு படப்பிடிப்பு நடத்த முக்கியமான இடங்களை தேர்வு செய்யவிருக்கிறார்களாம். இவர்கள் இடங்களை தேர்வு செய்தபிறகு படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

விஜய் தற்போது நடித்து முடித்துள்ள ‘தெறி’ படம் ஏப்ரல் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. எனவே, இப்படம் வெளிவந்த பிறகு மே முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தேர்வாகியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions