விஜய் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

Bookmark and Share

விஜய் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி சிவா தலைமையில் 11 குழந்தைகளுக்கு 2 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. தையல் மிஷின், அன்னதானமும் வழங்கப்படுகிறது.

மத்திய சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பூக்கடை குமார் தலைமையில் விருகம்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் 280 பேருக்கு உடைகள், உணவு வழங்கப்படுகிறது.

தென்சென்னை மாவட்ட தலைவர் அப்புனு தலைமையில் வடசென்னை கோவிலில் சிறப்பு பூஜை, அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

காஞ்சீபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் இ.சி.ஆர்.சரவணன் தலைமையில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், தாம்பரம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 42 கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.

இதில் தினேஷ், பாலாஜி, சின்னு, ரகீம், ஜேம்ஸ், ஆனந்து, பத்திரி பாலா, பிரபு, சரத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி நகரம் சார்பில் ஆதரவற்ற இல்லத்தில் 110 குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. பெயர் பலகை திறக்கப்படுகிறது. மாவட்ட பொறுப்பாளர் எஸ்.விஜய குமார் நகர தலைவர் சி.கிருபாகரன், திருமலை, வெங்கட், ஹரி, ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் பால முருகன் தலைமையில் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் என்.ஆனந்து பங்கேற்கிறார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்! பிரம்மிக்க வைத்த விசயம்
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
பின்னி பெடலெடுங்க சார், அஜித்திற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே.!
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions