விஜய் பிறந்தநாளுக்கு உடல் உறுப்பு தானம் செய்த ரசிகர்கள்

Bookmark and Share

விஜய் பிறந்தநாளுக்கு உடல் உறுப்பு தானம் செய்த ரசிகர்கள்

விஜய் தனது 43-வது பிறந்த நாளை ஜூன் 22ம் தேதி கொண்டாட இருக்கிறார். விஜய்யின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் பலரும் பல்வேறு வகையிலான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், காஞ்சி கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் 43 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளார்கள். இந்த விழா அகில இந்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆனந்த் (முன்னாள் எம்.எல்.ஏ), ரவிராஜா, ராஜேந்திரன், ஏ.சி.குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் காஞ்சி கிழக்கு மாவட்ட பம்மல் மற்றும் பல்லாவரம் நகர விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பம்மல் நகர அமைப்பாளர் சத்யா ஏற்பாடு செய்திருந்தார்.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். மேலும் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா
அஜித் பற்றி தப்பா பேசினால் சோடா பாட்டில் பறக்கும் - சொல்றது யார் பாருங்க.!
'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions