யார் இந்த இளையதளபதி? இது தெரியுமா உங்களுக்கு

Bookmark and Share

யார் இந்த இளையதளபதி? இது தெரியுமா உங்களுக்கு

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல என பல உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்கள் இருக்கிறார்கள்.சினிமாவை பொறுத்தவரை விஜய் தளபதி, இளைய தளபதி என சொல்லப்படுவதுண்டு. இளைஞர்கள் மத்தியிலும், குழந்தைகளிடையேயும் அவருக்கு தனி வரவேற்பு உண்டு.

ஆம் பலரும் விஜய்யை அண்ணா, அண்ணா என்ற உறவுமுறையுடன் அழைப்பார்கள். இது அவரின் தனிச்சிறப்பு.தன் அப்பாவை போல உழைப்பை மட்டுமே நம்புவார். தோல்விகள், வெற்றிகளானாலும் அமைதியை மட்டுமே காட்ட நினைப்பவர்.

உழைத்திடு, உயர்ந்திடு என்ற வார்த்தைகளை தனக்கு மட்டுமல்ல தன்னை நம்பும், பின் தொடரும் ரசிகர்களுக்கும் கூறிவருகிறார்.

படப்பிடிப்புகளில் மிகவும் ஜாலியான மனிதர், நிஜத்திலும் அனைவரையும் சிரிக்க வைத்து மகிழ்வார் என உடன் பணியாற்றிவர்களே சொன்னதுண்டு.

உடன் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களின் நிலைமை என்ன என கண்டுபிடித்து விடும் அவர், யாரையாவது அழுத்தி என்ன ஒரு மாதிரி இருக்கீங்க என விஜய் கேட்டால் போதும்.
சம்மந்தபட்ட அந்த நபருக்கு தேவையான உதவிகள் உடனே போய்ச்சேருமாம். வயது வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் மதிப்பு கொடுப்பாராம். இதனால் அவருக்கு நட்பு வட்டார பலம் அதிகம்.

வேலாயுதம் படத்தில் விஜய்க்கு சில ஆலோசனைகள் ஜெயம் ரவி வழங்கினாராம். அதை விஜய் அன்புடன் எடுத்துக்கொண்டு இன்று வரை அவரோடு நட்புடன் இருந்து வருகிறாராம்.
நீங்கள் மிஸ் பண்ணி வெற்றி பெற்ற படங்கள் எவை? என கேட்ட போது தூள், முதல்வன் போன்ற படங்களை கூறி அதில் நடித்தவர்களை பாராட்டினாராம்.

ஏ. ஆர். முருகதாசின் கஜினி, கெளதம் மேனனின் காக்க காக்க போன்ற படங்கள் விஜய்க்கே முதலில் வந்தது. இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்தற்காக விஜய்க்கு நன்றி சொன்னாராம் சூர்யா.

போக்கிரி திரைப்படத்தில் சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று சொன்னவர் அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு சமூக நலன் விரும்பிகளின் கோரிக்கையை ஏற்று இனி சிகரெட் பிடிப்பது போன்று நடிப்பதில்லை எனவும் உறுதி எடுத்தார்.

வாழ்க்கை என்பது வட்டம் போல எனவும், மேலிருப்பன் கீழே வருவான், கீழே இருப்பவன் மேலே போவான் என்ற அவர் பேசிய வசனங்கள் இப்போதைய நடைமுறையில் சாத்தியமே.


Post your comment

Related News
ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!
விஜயின் மெகா ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஜித் - செம மாஸ் தகவல்.!
விஜயின் அதிரடி அறிவிப்பால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - புகைப்படம் இதோ.!
பிரபல இயக்குனருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள் - சர்ச்சை புகைப்படம் உள்ளே.!
தளபதி-62 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? - பிரம்மிப்பில் திரையுலகம்.!
பிரமாண்ட வெற்றிப்பட இயக்குனருடன் விஜய்யின்(Vijay63) அடுத்தப்படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
அதுக்குள்ள இப்படியா? கடும் அப்செட்டில் தளபதி ரசிகர்கள் - என்ன நடந்தது தெரியுமா?
முதல் முறையாக தென்னிந்திய சினிமாவில் நடக்கும் SIFCC Conference.!
ரஜினியால் தளபதி விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள் - தளபதியின் முடிவு என்ன?
புத்தாண்டு கொண்டாட விஜய் ரசிகர்கள் செய்த வேலை, குவியும் பாராட்டுகள்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions