ஹீரோயின் முக்கியமல்ல - விஜய் சேதுபதி பேட்டி!

Bookmark and Share

ஹீரோயின் முக்கியமல்ல - விஜய் சேதுபதி பேட்டி!

எப்பவும் வித்தியாசமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து, அதில் முத்திரையும் பதித்து ரசிகர்களை கவருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது அவர் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள படம் ஆரஞ்சுமிட்டாய். நடித்ததோடு இல்லாமல் இந்தப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.

விஜய் சேதுபதியுடன் ரமேஷ் திலக், அஷ்ரிதா நடிக்கிறார்கள். பிஜு விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். ஜஸ்டின் பிரகாகரன் இசை அமைக்கிறார். படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

படத்தின் கதை தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத புதுமையான கதை. புதுமைகளை தேடிச் செல்லும் விஜய் சேதுபதி இதில் 55 வயது முதியவராக நடிக்கிறார். படத்தில் ஒரு ஆம்புலன்ஸ் முக்கியமான ரோல் வகிக்கிறது. படத்தின் பெரும்பகுதி அந்த ஆம்புலன்சிலேயே நடக்கிறது. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இப்படம் பற்றி விஜய் சேதுபதி நம்மிடம் பேசும்போது, பிஜூ விஸ்வநாத் இப்படத்தின் கதையை சொன்னபோது நான் தயாரிக்கிறேன் மட்டும் தான் சொன்னேன். ஆனால் உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட எல்லோரும் சேர்ந்து என்னை இந்தப்படத்தில் நடிக்க வைத்துவிட்டார்கள்.

அப்பாவுக்கும், மகனுக்கும் இடையேயான ஒரு அழகான கதை தான் இந்த ஆரஞ்சுமிட்டாய். எனது முதல்பட தயாரிப்பையே ஒரு சுவிட்டோடு ஆரம்பித்துள்ளேன் என்றவரிடம், இப்படத்தில் உங்களுக்கு ஹீரோயின் இல்லையே என்று கேட்டபோது... என்னை பொறுத்தவரை ஒரு படத்திற்கு கதை தான் முக்கியம், ஹீரோயின் முக்கியமல்ல என்று கூறினார்.

ஆரஞ்சுமிட்டாய் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் இம்மாதம் ஜூலை 31ம் தேதி நடைபெற இருக்கிறது.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions