ரசிகர்களை குஷி படுத்த விஜய் எடுத்த அதிரடி முடிவு

Bookmark and Share

ரசிகர்களை குஷி படுத்த விஜய் எடுத்த அதிரடி முடிவு

இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் கமலின் தூங்காவனம், அஜித்தின் வேதாளம் படங்கள் திரைக்கு வருகிறது.

இதனால் கமல்-அஜித்தின் ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆனால் விஜய் ரசிகர்கள் தங்களது தளபதியின் படம் வராததால் உற்சாகமிழந்து காணப்படுகிறார்களாம்.

இந்த தகவலை விஜய்யின் காதுக்கு அவரது ரசிகர் மன்றங்கள் கொண்டு சென்றுள்ளன. அதனால் விஜய், ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்று நினைத்து, தனது 59வது படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்து விட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.

அதையடுத்து தற்போது டீசர்களை தயார் செய்து கொண்டிருக்கிறாராம், இயக்குனர் அட்லி. அதோடு பர்ஸ்ட் லுக் வேலைகளும் நடக்கிறதாம். அதனால் தீபாவளி தினத்தில் விஜய் 59வது படத்தின் டீசரை, போஸ்டரை வெளியிடுவது உறுதியாகிவிட்டது.

அதேசமயம், இன்னும் படத்திற்கு பெயரிடாத ஒரு குழப்பமான சூழல் இருப்பதால், இந்த தீபாவளி தினத்தில் தனது 59வது படத்தின் டீசரோடு டைட்டிலையும் விஜய் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions