‘காக்கி’ டைட்டில் கவலையில் விஜய்!

Bookmark and Share

‘காக்கி’ டைட்டில் கவலையில் விஜய்!

அட்லீ இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிகொண்டிருக்கும் படம் விஜய் 59.

இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்திற்கு என்ன தலைப்பு? தற்போது பர பரப்பான டிஸ்கஷன் இது குறித்துதான்…. முதலில் மூன்று முகம் என்று வைக்க நினைத்தார்கள்.

கடைசியாக ‘காக்கி’ என்ற முடிவுக்கு வந்தார்கள். அதற்குள் விஷயம் வெளியில் பரவ, காக்கி… காக்கி… என்று கண்ணில் படுகிற கலரையெல்லாம் காக்கி என்றே கொண்டாடியது விஜய் ரசிகர்களின் மனசு. இந்த தலைப்பு விஜய்க்கும் ரொம்ப பிடித்துப் போனதுதான் விசேஷம்.

இந்த நிலையில் எப்படியாவது காக்கியை கைப்பற்றிவிட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட பெயர் லிஸ்ட்டுகளை பார்த்தால், காக்கி பெயர் அது வேறொரு டைரக்டரின் படத்தின் பெயர் ஆக பதிவு செய்து இருக்கிறது.

இந்நிலையில் வாய்மை படத்தை இயக்கி வரும் செந்தில்குமார் காக்கி தலைப்பை பதிவு செய்தது மட்டுமில்லாமல் விஜய் ஆண்டனியை வைத்து விரைவில் இயக்க திட்டமிட்டுள்ளாராம். அவரிடம் விஜய் 59 குழு தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தலைப்பை கொடுக்க மறுத்துவிட்டாராம். இது விஜய் மற்றும் விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions