விஜய்60 லேட்டஸ்ட் தகவல், மீண்டும் இணையும் விஜய், அட்லீ!

Bookmark and Share

விஜய்60 லேட்டஸ்ட் தகவல், மீண்டும் இணையும் விஜய், அட்லீ!

இளையதளபதி விஜய்யின் 59வது படமே இன்னும் முடியாத நிலையில், அவரின் அடுத்த படமான விஜய்60 பற்றிய தகவல்கள் தினமும் வந்துகொண்டே இருக்கின்றன.

அழகிய தமிழ் மகன்  இயக்குனர் பரதன் இந்த படத்தை இயக்கவுள்ளார். கத்தி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சதீஷ், மீண்டும் விஜய்யோடு இந்த படத்தில் இணையவுள்ளார். அதை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இப்போது ரஜினியின் கபாலி படத்திற்கு இசையமைத்து வரும் சந்தோஷ் நாராயணன், விஜய்60'க்கும் இசையமைக்கவுள்ளர் என கூறப்படுகிறது. மேலும், இளையதளபதி விஜய் நடிப்பில் ராஜாராணி படத்தின் இயக்குனர் அட்லீ இயக்கும் "விஜய் 59" படத்தின் படப்பிடிப்பு கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் மீண்டும் இளையதளபதி விஜயுடன் இயக்குனர் அட்லீ இணைவதாக தகவல் வந்துள்ளது. அட்லீயின் இயக்கம் விஜய்க்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் எனவே மீண்டும் இன்னொரு படத்தில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions