உறுதியானது விஜய்-60 இயக்குனர்!

Bookmark and Share

உறுதியானது விஜய்-60 இயக்குனர்!

விஜய் இப்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படம் முடிவடைந்ததும், விஷாலின் தாமிரபரணி, தனுஷின் வேங்கை, படிக்காதவன் அஜித்தின் வீரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பெரிய தயாரிப்பு நிறுவனமான விஜயாபுரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு ஒருபடம் நடிக்கவிருக்கிறார்.

அந்தப்படத்தின் கதையை இயக்குநர் பரதன் எழுதவிருப்பதாகவும் படத்தை வேறொருவர் இயக்கப்போவதாகவும் சொல்லப்பட்டது. பல இயக்குநர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டவாகவும் கடைசியாக ஹரி இயக்கப்போகிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்போது அதிலும் மாற்றம் நடந்திருக்கிறது.

கதையை எழுதிய பரதனே இயக்கட்டும் என்று முடிவு செய்துவிட்டார்களாம். இதுபற்றி இயக்குநர் பரதனிடம் கேட்டால், விஜய் சார் படத்தை இயக்கவிருக்கிறேன், அவருடைய பெரிய பெருந்தன்மையால் எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது என்றவர், அடுத்தவருட தொடக்கத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கிறார்.  


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions