இளையதளபதி விஜய்யுடன் மீண்டும் இணையும் சதீஷ்

Bookmark and Share

இளையதளபதி விஜய்யுடன் மீண்டும் இணையும் சதீஷ்

விஜய் -அட்லி படத்திற்கு ‘தெறி’ என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியானது. இது ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

இப்படத்தையடுத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரபரப்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இப்படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும், பிரவீண் படத்தொகுப்பு செய்யவுள்ளதாகவும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது காமெடி நடிகர் சதீஷ் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

சதீஷ் ஏற்கனவே விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'கத்தி' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பது குறித்து சதீஷ் கூறும்போது, 'விஜய் சாருடன் கத்தி படத்திற்கு பின்னர் மீண்டும் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அவருடைய 60-வது படத்தில் நானும் இடம்பெற்றது ஒரு பெருமையான விஷயமாக கருதுகிறேன்' என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions