தான் எடுத்த முடிவிலிருந்து மனம்தளராத விஜய்

Bookmark and Share

தான் எடுத்த முடிவிலிருந்து மனம்தளராத விஜய்

விஜய்யின் 60வது படத்தின் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா, மோகன் ராஜா, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.

ஆனால், பரதன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, பரதனே இயக்கட்டும் என்று முடிவு செய்தார். 

ஆனால், விஜய்யின் இந்த முடிவுக்கு இணையத்தில் விஜய் ரசிகர்கள் மத்தியிலேயே அதிருப்தி தெரிந்தது.

பலரும் கண்டிப்பாக பரதனாக இருக்காது என்று கூறிய போது, படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். மேலும், விஜய் உடன் இருப்பவர்கள் பலரும் "60வது படம் பெரிய இயக்குநருடன் பணிபுரியலாம்" என்று கூறியிருக்கிறார்கள்.

அதற்கு "எனக்கு பரதன் மீது நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக எனது திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக அப்படம் இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார் விஜய்.

இப்படத்தின் எடிட்டராக ப்ரவீன், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், விஜய்யுடன் நடிக்கும் காமெடியனாக சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions