
கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் பேண்டஸி திரைப்படம் புலி. இரண்டு விதமான காலக்கட்டத்தில் நடக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர்.
முக்கிய வேடத்தில் நடிகை ஸ்ரீதேவி நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஸ்ரீதேவி நடிக்கும் படம் இதுவாகும். சிம்புதேவன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, சென்னை-உத்தண்டியில் தொடங்கியது.
அடுத்தப்படியாக, தற்போது கேரளாவில் அடர்ந்த வனப்பகுதிகளில் புலி படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. புலி படத்தில் விஜய் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒரு வேடத்தில் உடல் எடையை அதிகரித்தும், மற்றொரு வேடத்தில் உடல் எடையை குறைத்தும் நடிக்க வேண்டும்.
இதனால் விஜய் விரைவில் உடல் எடையை அதிகரிக்க இருக்கிறார். முதல்முறையாக, நடிகர் விஜய் உடல் எடையை அதிகரித்து, குறைத்து நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஐ படத்திற்காக விக்ரம் உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும் நடித்தார். இப்போது அவரைப்போன்று விஜய்யும் நடிக்க இருக்கிறார்.
Post your comment