விஜய்-விக்ரமுடன் மீண்டும் இணையும் ஷங்கர்?

Bookmark and Share

விஜய்-விக்ரமுடன் மீண்டும் இணையும் ஷங்கர்?

ஷங்கர் தற்போது ரஜினியை வைத்து ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்கிடையில் ரஜினி ‘கபாலி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானதால், அதற்குள் ஒரு படத்தை முடித்துவிடலாம் என்று எண்ணி, விஜய்-விக்ரமை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க முடிவு செய்தாராம்.

ஆனால், ஒரு சில காரணங்கள் அப்படத்தை எடுப்பதில் தாமதமானதாம். இதற்கிடையில், ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதால், அதற்குள் ‘எந்திரன்’ 2-ம் பாகத்தின் ஆரம்ப கட்ட பணிகளை முடித்துவிட வேண்டும் என்று எண்ணி, விஜய்-விக்ரம் இணையும் படத்தை இயக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டாராம்.  

எனினும், ‘எந்திரன்’ 2-ம் பாகம் முடிந்தபிறகு, இவர்கள் இருவரையும் வைத்து புதிய படம் ஒன்றை ஷங்கர் இயக்குவார் என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அப்படி ஒரு படம் வந்தால், அது உலக சினிமாவிலேயே வரலாறு படைக்கும் விதமாக அமையும் என்று கூறப்படுகிறது.

ஷங்கர் ஏற்கெனவே விஜய்யை வைத்து ‘நண்பன்’ என்ற படத்தையும், விக்ரமை வைத்து ‘அந்நியன்’, ‘ஐ’ ஆகிய படங்களையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions