விஜய், விக்ரமை துரத்தும் ஷங்கரின் உதவியாளர்கள்!

Bookmark and Share

விஜய், விக்ரமை துரத்தும் ஷங்கரின் உதவியாளர்கள்!

புலி படத்தை முடித்து விட்ட விஜய், அடுத்து நடிக்கப்போகும் தனது 59 பட வேலைகளில் அடுத்து இறங்க தயாராகி விட்டார். ஜூலை 9-ந்தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

மேலும், இந்த படத்தை எம்ஜிஆர் படங்களைப்போன்று ஜனரஞ்சகமான குடும்பப் பின்னணி கொண்ட கதையில் இயக்குகிறாராம் அட்லீ. குறிப்பாக விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்குமே இதில் விஜய்யின் கதாபாத்திரம் பிடித்தமானதாக இருக்குமாம்.

அதோடு இந்த படத்தை இயக்கும் அட்லீ, பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அந்தவகையில், ஷங்கரின் நண்பன் படத்தில் விஜய் நடித்தபோது அவருடன் நட்பு வளர்த்துக்கொண்ட அட்லீ, பின்னர் விஜய்யை சந்தித்தபோது ஒரு கதையை அவரிடம் சொல்லி ஓகே பண்ணினாராம்.

விளைவு, இப்போது ஷங்கரிடத்தில் உதவியாளர்களாக பணியாற்றிய பல இயக்குனர்களுக்கு விஜயிடம் கதை சொல்ல வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டு கதை சொல்ல அவரை துரத்துகின்றனர்.

அதேபோல் ஷங்கரின் அந்நியன், ஐ படங்களில் நடித்த விக்ரமுக்கும் கதை பண்ணி வைத்திருக்கும் ஷங்கரின் உதவியாளர்கள் அவரிடமும் கால்சீட் கேட்டு வருகிறார்கள்.

 


Post your comment





Related News
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
‘அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க ‘ன்னு சொன்னாலும்,’ அஜித் விஜய்க்கு மட்டும்தானா?-முறைப்பில் விக்ரம்
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
கேரளாவில் ரசிகர்கள் முன்பு விஜய் ஸ்டைலில் பேசிய விக்ரம்!
முதல்முறையாக ஒரே நிறுவனம் தயாரிப்பில் நடிக்கும் விஜய், விக்ரம் பிரபு!
மலையையே தூக்கி வைத்தாலும் தாங்கக்கூடியவர் விஜய் – புகழும் பிரபல இயக்குனர் !
வேதாளம், ஐ படங்களின் வசூலை ஓரங்கட்டியதா தெறி?
விஜய்-விக்ரமுடன் மீண்டும் இணையும் ஷங்கர்?
விஜய்யை வைத்து புரோமோஷன் தேடிக்கொண்ட விக்ரம்
விக்ரம் வழியில் விஜய்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions