மலையையே தூக்கி வைத்தாலும் தாங்கக்கூடியவர் விஜய் – புகழும் பிரபல இயக்குனர் !

Bookmark and Share

மலையையே தூக்கி வைத்தாலும் தாங்கக்கூடியவர் விஜய் – புகழும் பிரபல இயக்குனர் !

‘இளையதளபதி’ விஜய்யின் ஆரம்ப கால படங்களில் அவருக்கு பெரும் திருப்புமுனையாக இருந்த படம் பூவே உனக்காக. இப்படத்தை இயக்கியவர் பல வெற்றி படங்களை கொடுத்த விக்ரமன்.

பூவே உனக்காக படத்தில் விஜய்யை கமிட் செய்ததும் ஒரு பிரபல நடிகர், இந்தளவு கனமுள்ள ஒரு கதையை குருவி தலையில் பனங்காயை வைப்பது போல் இவர் தாங்குவாரா என விக்ரமனிடம் கேட்டாராம்.

அதற்கு விக்ரமன் பரங்கிமலையையே வைத்தாலும் தாங்கும் அளவுக்கு விஜய் திறமையான நடிகர் என கூறினாராம்.

அவரது வாக்கு தற்போது பலித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் உருமாறியுள்ளார். இதை சமீபத்தில் நடந்த இசைவெளியீட்டு விழா ஒன்றில் விக்ரமன் நினைவு கூர்ந்துள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions