விஜய் படத்தை போலவே நடந்த உண்மை சம்பவம்

Bookmark and Share

விஜய் படத்தை போலவே நடந்த உண்மை சம்பவம்

விஜய் நடித்த படங்களில் சில விஷயங்கள் உண்மையாகவே சிலருக்கு நடக்கும். அப்படி நண்பன் படத்தில் விஜய், அனுயாவுக்கு வீடியோ மூலம் பிரசவம் பார்க்கும் ஒரு காட்சி இருக்கும்.

அதேபோல் அண்மையில் மருத்துவ படிப்பு படித்துக்கொண்டிருக்கும் விபின் அஹமதாபாத்தில் இருந்து பூரிக்கும் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. ரயிலில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்பதால் அவர் தன்னுடைய மருத்துவர் WhatsApp குரூபிற்கு கால் செய்து, அவர்கள் கூறும் அறிவுரைப்படி பிரசவம் பார்த்துள்ளார்.

இதுகுறித்து விபின் கூறும்போது, குழந்தையின் தலை வெளியே வருவதற்கு மட்டும் மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் எப்படியோ நான் செய்து முடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

பிறந்த ஆண் குழந்தையின் குடும்பம் விபினுக்கு தங்களது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சிலர் விஜய்யின் நண்பன் படத்திலும் இப்படி ஒரு காட்சி இருக்கும் என்று நினைவு செய்து வருகின்றனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions