விஜய் மாதிரி விஷாலை கொண்டு வருவேன் - மாநில தலைவர் ஜெயசீலன்

Bookmark and Share

விஜய் மாதிரி விஷாலை கொண்டு வருவேன் - மாநில தலைவர் ஜெயசீலன்

விஷாலை, நடிகர் விஜய் மாதிரி கொண்டு வருவேன் என்கிறார் அகில இந்திய புரட்சி தளபதி விஷால் நற்பணி இயக்க தலைவர் ஜெயசீலன். சமீபகாலமாக விஷாலின் செயல்பாடுகள் அதிரடியாக இருக்கிறது. நடிகர் சங்கத்தில் அவர் காட்டும் ஈடுபாடு, சக நடிகருக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் குரல் கொடுப்பது என்று மட்டுமல்லாமல் சமூகத்திலும் அதிக ஈடுபாடு காட்டுகிறார். தனது ரசிகர் மன்றம் மூலம் பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். இருதினங்களுக்கு முன்னர் கூட சென்னையில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு உதவிகள் வழங்கினார். அதுமட்டுமின்றி ஏழை பெண்களுக்கு இலவச திருமணம், ஏழை குடும்பத்தாருக்கு நலத்திட்ட உதவிகள் என்று இன்னும் பல விஷயங்களை செய்ய இருக்கிறார்.

இதுப்பற்றி விஷாலின் நற்பமணி மன்ற அகில இந்திய தலைவர் ஜெயசீலனை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறியதாவது, விஜய்யின் ரசிகர் மன்றத்தில் 13 வருடம் மாநில தலைவராக இருந்துள்ளேன். ஆனால் சில பல பிரச்னைகளால் அங்கிருந்து வௌியேறிவிட்டேன். ஏப்ரல் மாதம் 2015ம் ஆண்டு அன்று விஷாலிடம் அகில இந்திய தலைவராக சேர்ந்தேன், சேர்ந்த இரண்டு நாளைக்குள்ளேயே அவரது சுறுசுறுப்பு, அவருக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பு, எந்த விளம்பர நோக்கத்தோடும் இல்லாமல் பரந்த மனதோடு அவர் செய்யும் உதவிகள்... இதை எல்லாவற்றையும் நான் கூர்ந்து கவனித்தேன். எந்த ஒரு பொறுப்பையும் நிர்வாகிக்க கூட சரியான நபர் விஷால். அரசியலுக்கு அப்பாற்பட்டு ரசிகர்களை பலப்படுத்துவதே மன்றத்தின் முக்கிய குறிக்கோள்.

சென்னை, மதுரவாயலில் உள்ள அரசு பள்ளியை, அந்த ஏரியா இன்ஸ்பெக்ட்டர் ஆனந்த பிரபு தத்தெடுத்து உள்ளார். அவரால் முயன்ற சில உதவிகளை பள்ளிக்கு செய்து வருகிறார். பள்ளி சார்பில் இருந்து அந்த பரிசுகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று விஷாலுக்கு அழைப்பு வந்தது. வெறும் விருந்தினராக கலந்து கொள்ள விரும்பாத விஷால், அவரால் முடிந்த சில உதவிகளையும் செய்தார்.

இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில், 10 ஏழை பெண்களுக்கு 51 சீர்வரிசை கொடுத்து வருகிற ஜூன் 21ம் தேதி திருமணத்தை நடத்தி வைக்க உள்ளார். ஜூலை மாதம் கோயம்பேட்டில் சில ஏழை குடும்பங்களுக்கு பசு மாடுகள் வழங்கும் திட்டம் உள்ளது. ஆகஸ்ட் 29ம் தேதி விஷாலின் பிறந்த தினத்தையொட்டி 50 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கவும், ரத்ததானம் உள்ளிட்ட பல சமூக சேவைகள் செய்ய திட்டமிட்டுள்ளோம். 

விஷாலின் வளர்ச்சிக்கு, ரசிகர் மன்றங்களாகிய நாங்கள் எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் சில உதவிகளையும், சில நல்ல திட்டங்களையும் செய்ய உள்ளோம். விஜய் மாதிரி விஷாலையும் கொண்டு வருவது தான் எங்கள் இலக்கு என்றார் அகில இந்திய விஷால் மன்ற தலைவர் ஜெயசீலன்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions