இளையதளபதி விஜய் ரசிகர்களால் அதிரடி டுவிட் போட்ட பாடலாசிரியர்

Bookmark and Share

இளையதளபதி விஜய் ரசிகர்களால் அதிரடி டுவிட் போட்ட பாடலாசிரியர்

இளையதளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தன்னுடைய 61வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ் என பல நடிகர்கள் பட்டாளமே படத்தில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் ஜுன் 22ம் தேதி வெளியாக இருக்கிறது. அதோடு ஆகஸ்ட் மாதம் வெளியீட்டு விழாவும், அக்டோபர் மாதம் பட ரிலீஸ் என்றும் படக்குழு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் பாடலாசிரியராக பணியாற்றியது பெரிய அனுபவம், என்னை இந்த பிரம்மாண்ட படத்தில் கமிட் செய்ததற்கு நன்றி என கூறியிருந்தார் பாடலாசிரியல் விவேக்.

இதனால் இளையதளபதி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூற, விவேக் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய் ரசிகர்களின் கணக்கில்லாத வாழ்த்துக்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions