நாளை வேலூரில் 11 ஜோடிக்கு இலவச திருமணம் செய்துவைக்கும் நடிகர் விஜய்!

Bookmark and Share

Alexander Skarsgard

வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் மன்றம் சார்பில் சத்துவாச்சாரி ரங்காபுரம் கிஷ்ணா திருமண மண்டபத்தில் நாளை 19-ந் தேதி 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடக்கிறது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். அவரது மனைவி சங்கீதா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்கொள்கின்றனர்.

திருமணம் முடிந்ததும் 11 ஜோடிகளுக்கு 51 வகையான சீர்வரிசை பொருட்களை விஜய் வழங்குகிறார். இதனையடுத்து மணமக்கள் குடும்பத்துடன் விஜய் புகைப்படம் எடுத்து கொள்கிறார்.

திருமணத்தில் மக்கள் இயக்கம் மாநில பொருப்பாளர் ஆனந்த் செயலாளர் ரவிராஜா, வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் வேலூர் மாவட்ட மக்கள் இயக்கம், ரசிகர் மன்ற நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

விஜய் வருவதையொட்டி அவரது ரசிகர்கள் வேலூர், காட்பாடி பகுதிகளில் வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர். திருமணம் நடைபெறும் ரங்காபுரம் பகுதியில் மக்கள் இயக்க கொடி தோரணங்கள் கட்டி உள்ளனர். இதனால் வேலூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. நடிகர் விஜய்க்கு மேளதாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.


Post your comment





Related News
சஞ்சய் தத் உயிருக்கு ஆபத்து புனே சிறைக்கு ரகசிய மாற்றம்?
விஜய்யுடன் டூயட் பாட வந்த என்னை குத்தாட்டம் போட வைத்துவிட்டார்கள் -நடிகை அருந்ததி புலம்பல்
\'வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்\' பட‌ ஜோடி மீது பட அதிபர் புகார்.
கௌதம் கார்த்திக் ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங்!
திரையில் 100 நாட்கள் தாக்குப்பிடித்த.. கமல்,சசிகுமார் படங்கள்
லிங்குசாமியுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!
1000 வருடங்களுக்கு பின் பூமியின் நிலையை பிரதி பலிக்கும் - ஜூன் 7ல் \'அபாயகிரகம்\'
பாக்யராஜின் முருங்கைக்காய் ட்ரிட்மெண்ட் - முந்தானை முடிச்சு பாகம் 2.
நயன்தாரா தோழியான டாப்ஸி.. வித்திட்ட ஆர்யா
வனவாசம் முடிந்தது.. ‘தெனாலிராமன்’ படத்திற்காக பாடிய வடிவேலு.






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2013. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions