மாரி படத்தில் நடித்தது அருமையான அனுபவம்: விஜய் யேசுதாஸ்

Bookmark and Share

மாரி படத்தில் நடித்தது அருமையான அனுபவம்: விஜய் யேசுதாஸ்

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வைத்து இயக்கவிருக்கும் புதிய படம் ‘மாரி’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் விஜய் யேசுதாஸுக்கு போலீஸ் கதாபாத்திரம்.

இது குறித்து விஜய் யேசுதாஸ் கூறும்போது,

‘நான் அறிமுகமாகும் முதல் தமிழ் படத்திலேயே போலீஸ் வேடம் கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இப்படத்தில் நடித்தது அருமையான அனுபவமாக இருந்தது. இதற்கு காரணமான நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் பாலாஜி மோகனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். 


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions