நடிகர்களாகும் பாடகர்கள்!

Bookmark and Share

நடிகர்களாகும் பாடகர்கள்!

பிரபல பின்னணிப் பாடகரான கே.ஜே.யேசுதாஸ் பாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அவரது மகனான பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் அவரது அப்பாவுக்கு நேர்மாறானவர். தன் அப்பாவின் குரல்வளத்தைக் கொண்டிருப்பதால் சுலபமாக பாடகரானவர் விஜய் யேசுதாஸ்.

சில பல ஹிட்பாடல்களைப்பாடி உள்ள அவர் தன் மனைவி உடன் இணைந்து ஈவன்மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்தி வருகிறார். அதனால் பாடுவதில் கவனம் செலுத்த முடியாமல்போய், பாடகர்களுக்கான ரேஸில் பின் தங்கினார்.

சின்ன வயதிலேயே நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்ட விஜய் யேசுதாஸ், விஜய் நடித்த தலைவா படத்தில் வில்லனாக நடிக்க ஓப்பந்தமானார். பிறகு ஏனோ அந்தப் படத்திலிருந்து விலகினார்.

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் மாரி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் யேசுதாஸ். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம். பாலாஜி மோகன் இயக்கி வரும் மாரி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பது குறித்து விஜய் யேசுதாஸிடம் கேட்டபோது, பின்னணி பாடி வந்த எனக்கு கேமராவுக்கு முன்னாடி நின்று நடிப்பது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கிறது.

காக்கி சட்டை அணிந்ததும் என்னை அறியாமல் ஒரு வீரம் எனக்கு வந்து விட்டது. சிறப்பாக நடிக்க தனுஷ் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார் என்று கூறியிருக்கிறார். மாரி படத்தில் தன் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் தொடர்ந்து நடிக்க இருக்கிறாராம்.

இவரைப்போலவே பாடகர் க்ரிஷ் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார். படம் ரெடியாகியும் பிசினஸ் ஆகாமல் வருடக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions