விஜய் 60 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

Bookmark and Share

விஜய் 60 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

விஜய்யின் 60-வது படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சென்னை அருகில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் இன்று இப்படத்தின் பூஜை நடந்தது. இதில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், காமெடி நடிகர் சதீஷ் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த பூஜையில் நடிகர் விஜய் வேஷ்டி, சட்டையுடன் கலந்துகொண்டார். கீர்த்தி சுரேஷ் பட்டுப் புடவையுடன் கலந்துகொண்டார்.

இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, ஸ்ரீமன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். 


Post your comment





Related News
‘விஜய் 60’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
விஜய் 60 டைட்டில் – குழப்பத்தில் விஜய்!
ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த விஜய் 60 படக்குழுவினர்!
சுவிட்சர்லாந்து செல்லும் விஜய் 60 படக்குழுவினர்!
விஜய் 60-ல் நடிக்கும் நடிகர்களின் விவரம்!
பொங்கல் விருந்தாக வெளியாகும் விஜய் 60
விஜய்யை சந்தித்த விஜய் 60 படக்குழுவினர்
தென் தமிழகத்தில் படமாகும் விஜய்60
”தெறி” டைட்டில் கெட்டவார்த்தையா?
தான் எடுத்த முடிவிலிருந்து மனம்தளராத விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions