விஜய்யை சந்தித்த விஜய் 60 படக்குழுவினர்

Bookmark and Share

விஜய்யை சந்தித்த விஜய் 60 படக்குழுவினர்

விஜய் தனது 59-வது படமாக ‘தெறி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தில் இப்படம் வெளிவரவிருக்கிறது. 

இதைத் தொடர்ந்து விஜய் தனது 60-வது படமாக பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்யவுள்ளார். 

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் மற்றும் எடிட்டர் பிரவீன் கே.எல்., ஒளிப்பதிவாளர் சுகுமார், இயக்குனர் பரதன் ஆகியோர் இன்று விஜய்யை அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்துள்ளனர். படப்பிடிப்புக்கு முன் விஜய்யை நேரில் பார்த்து அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

சந்தோஷ் நாராயணன் தனது மனைவியுடன் விஜய்யை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.


Post your comment





Related News
‘விஜய் 60’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
விஜய் 60 டைட்டில் – குழப்பத்தில் விஜய்!
ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த விஜய் 60 படக்குழுவினர்!
சுவிட்சர்லாந்து செல்லும் விஜய் 60 படக்குழுவினர்!
விஜய் 60-ல் நடிக்கும் நடிகர்களின் விவரம்!
விஜய் 60 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது
பொங்கல் விருந்தாக வெளியாகும் விஜய் 60
தென் தமிழகத்தில் படமாகும் விஜய்60
”தெறி” டைட்டில் கெட்டவார்த்தையா?
தான் எடுத்த முடிவிலிருந்து மனம்தளராத விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions