பொங்கல் விருந்தாக வெளியாகும் விஜய் 60

Bookmark and Share

பொங்கல் விருந்தாக வெளியாகும் விஜய் 60

விஜய் தற்போது நடித்துள்ள ‘தெறி’ படம் அவருக்கு 59-வது படமாகும். இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் புத்தாண்டில் இப்படம் வெளிவரகாத்திருக்கிறது. 

இந்நிலையில், விஜய் தனது 60-வது படமாக பரதன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை மே மாதம் தொடங்கவிருக்கின்றனர். 

தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முடித்து 2007-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாகவே விஜய்க்கு ‘பொங்கல்’ பண்டிகையில் வெளிவரும் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. 

‘போக்கிரி’, ‘நண்பன்’, ‘காவலன்’, ‘ஜில்லா’ ஆகிய படங்கள் விஜய்க்கு பெரிய ஹிட் கொடுத்துள்ளன. அதன்படி, இந்த படத்தையும் பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் ‘கில்லி’ படத்தை போன்று ஒரு விறுவிறுப்பான திரைக்கதையம்சத்துடன் உருவாகவிருக்கிறது. 

கிராமம் மற்றும் நகரம் சார்ந்து இந்த படம் இருக்கும் என்றும், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான படமாகவும் இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


Post your comment





Related News
‘விஜய் 60’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
விஜய் 60 டைட்டில் – குழப்பத்தில் விஜய்!
ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த விஜய் 60 படக்குழுவினர்!
சுவிட்சர்லாந்து செல்லும் விஜய் 60 படக்குழுவினர்!
விஜய் 60-ல் நடிக்கும் நடிகர்களின் விவரம்!
விஜய் 60 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது
விஜய்யை சந்தித்த விஜய் 60 படக்குழுவினர்
தென் தமிழகத்தில் படமாகும் விஜய்60
”தெறி” டைட்டில் கெட்டவார்த்தையா?
தான் எடுத்த முடிவிலிருந்து மனம்தளராத விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions