விஜய் 60-ல் நடிக்கும் நடிகர்களின் விவரம்!

Bookmark and Share

விஜய் 60-ல் நடிக்கும் நடிகர்களின் விவரம்!

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘தெறி’. அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமந்தா, எமிஜாக்சன், ராதிகா சரத்குமார், நைனிகா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக பரதன் இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இது அவருக்கு 60-வது படம். இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் சதீஷ் மட்டும் உறுதி செய்யப்பட்டிருந்தது. 

தற்போது இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்களின் விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, அபர்ணா வினோத், ஸ்ரீமன், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன், ஹரிஸ் உத்தமன், மைம் கோபி, சரத் லோஹிதஸ்வா ஆகியோர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். 

மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு சுகுமாரன் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions