வெப்பமான இடத்திலிருந்து குளிர் பிரதேசத்துக்கு மாறும் விஜய் 61 படக்குழு

Bookmark and Share

வெப்பமான இடத்திலிருந்து குளிர் பிரதேசத்துக்கு மாறும் விஜய் 61 படக்குழு

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய படப்பிடிப்பில் வடிவேலு, விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இதுவரை ராஜஸ்தான், சென்னை என ரொம்பவும் வெப்பமான இடங்களில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தக்கட்ட உறைய வைக்கும் குளிர் பிரதேசங்களில் நடத்தவுள்ளனர். இந்த படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. 

’விஜய் 61’ படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.


Post your comment





Related News
விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்கு முன் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல்
விஜய்-61 கதை இதுதானா- லீக்கான கதைக்களம்
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா
அது உண்மையில்ல! விஜய் 61 படக்குழு பகிரங்க தகவல்
25 வருடத்திற்கு பிறகு விஜய்-61 படத்திற்காக வரும் பிரமாண்டம்- புகைப்படம் உள்ளே
விஜய்யின் 61வது படப்பிடிப்பில் என்ன தான் நடக்கிறது?
விஜய் 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் யார் நடிக்கிறார் தெரியுமா?
விஜய்யின் 61வது படக்குழுவின் வேண்டுகோள்- ரசிகர்கள் ஏற்பார்களா?
விஜய் 61 புதிய புகைப்படம் லீக்கானது - அதிர்ச்சியில் படக்குழு
மாடர்ன் இளைஞராக கலக்குகிறாராம் விஜய்! விஜய் 61







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions