பஞ்சு அருணாசலம் உடலுக்கு விஜயகாந்த் அஞ்சலி!

Bookmark and Share

பஞ்சு அருணாசலம் உடலுக்கு விஜயகாந்த் அஞ்சலி!

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான பஞ்சு அருணாசலம் (73). மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் தி.நகரில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார்.

அவரது உடலுக்கு நடிகர் - நடிகைகள் திரையுலக பிரமுகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். பஞ்சு அருணாசலத்தின் மகன் சண்முகம், மகள் கீதா அமெரிக்காவில் இருந்து வர தாமதம் ஏற்பட்டதால் அவரது உடல் கடந்த 2 நாட்கள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை பஞ்சு அருணாசலத்தின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து தி.நகரில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று காலை பஞ்சு அருணாசலம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இயக்குனர்கள் எஸ்.பி. முத்துராமன், மகேந்திரன், லிங்குசாமி, வெங்கட் பிரபு, தங்கர்பச்சான், சீமான், கார்த்திக் சுப்பு, எழில், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் விஷால், டி.ராஜேந்தர், ராஜேஷ், செந்தில், கருணாஸ், விவேக், மற்றும் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் உள்பட திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை 4 மணிக்கு கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் பஞ்சு அருணாசலம் உடல் தகனம் நடக்கிறது. பஞ்சு அருணாசலம் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions